முதற் பக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

விக்கிப்பீடியாவிற்கு நல்வரவு. இது உங்களைப் போன்ற ஆர்வமுடையவர்களால் தொகுக்கப்பட்டு கட்டுப்பாடுகள் ஏதும் இன்றி இலவசமாகப் பயன்படுத்தக்கூடிய ஒரு பன்மொழிக் கலைக் களஞ்சியத் திட்டமாகும். இங்கு நீங்களும் உங்களுக்கு விருப்பமான தலைப்புகளில் புதிதாகக் கட்டுரைகள் எழுதலாம்; ஏற்கனவே உள்ள பக்கங்களை மேலும் விரிவாக்கலாம். விவரங்கள் அறிய புதுப் பயனர்களுக்கான விக்கிப்பீடியா அறிமுகப் பக்கத்தை பார்க்கவும்.

கட்டுரைகள் எண்ணிக்கை: 16,155

முதற்பக்கக் கட்டுரைகள்


மெம்ரிஸ்டர் (Memristor) அல்லது நினைவுகொள் மின்தடை என்பது ஒரு புது வகையான இரு-மின்முனையம் கொண்ட அடிப்படை மின்னுறுப்பாகும். இப்புதிய மின்னுறுப்பின் கண்டுபிடிப்பை ஏப்ரல் 30, 2008 இல் அமெரிக்காவில் உள்ள "ஹியூலிட் பாக்கார்டு" நிறுவனத்தைச் சேர்ந்த ஆர். ஸ்டான்லி வில்லியம்சு என்பவரும் அவருடைய உடன் ஆய்வாளர்களும் அறிவித்தார்கள். இதனைக் கண்டுபிடிக்கும் முன்பு, மின்னியல் வரலாற்றில், மின்தடையம், மின்தூண்டி, மின்தேக்கி ஆகிய மூன்றே அடிப்படை மின் உறுப்புகளாக இருந்தன. இந்த நினைவுகொள் மின்தடை என்னும் புதிய உறுப்பானது ஓர் அடிப்படையான நான்காவது உறுப்பாகும்.


மலையாளம் தென்னிந்தியாவிலுள்ள கேரளத்தில் பெரும்பான்மையாகப் பேசப்படும் மொழியாகும். இந்திய அரசு அங்கீகரித்துள்ள மொழிகளில் இதுவும் ஒன்று. இம்மொழி கேரளத்தின் அதிகாரபூர்வ மொழியாகும். சிங்கப்பூர், மலேசியா, வளைகுடா நாடுகள் போன்றவற்றிலும் இம்மொழி பேசப்படுகிறது. திராவிட குடும்பத்தைச் சேர்ந்த மலையாளத்துக்கு தமிழ், சமசுகிருதம் முதலிய செம்மொழிகளோடு தெளிவான தொடர்புகள் உண்டு. மலையாளம் பேசுவோரைப் பொதுவாக மலையாளிகள் என அழைப்பர். இருப்பினும், அவர்களுடைய மாநிலத்தினைக் கொண்டு கேரளர்கள் எனவும் அழைப்பதுண்டு. உலகத்தில் 35 000 000 மக்கள் மலையாள மொழியினைப் பேசுகின்றனர்.


உங்களுக்குத் தெரியுமா


செய்திகளில்

சிறப்புப் படம்

{{{texttitle}}}

பெரும் இன அழிப்பு என்பது இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், 6 மில்லியன் ஐரோப்பிய யூதர்கள் ஜெர்மனியில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கப் பயன்படும் ஆங்கிலச் சொல்லான ஹாலோகோஸ்ட் (Holocaust) என்பதற்கு இணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அக்காலத்தில் ஜேர்மனியில் ஆட்சியில் இருந்த, அடொல்ஃப் ஹிட்லரின் தலைமையிலான தேசிய சோசலிச ஜேர்மன் தொழிலாளர் கட்சியின் (நாசி) இன அழிப்புக் கொள்கையின் ஒரு பகுதியாக இடம்பெற்றது. யூதர்கள் தவிர வேறும் பிற இனத்தவர்களும், பிரிவினரும் கூடப் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களுள், ஜிப்சிகள், சோவியத் ஒன்றியத்தவர், பொதுவுடமைவாதிகள், போல் இனத்தவர், பிற சிலாவிய மக்கள், ஊனமுற்றோர், தன்னினச் சேர்க்கையாளர், அரசியல் எதிரிகள், மாறுபட்ட சமயக்கருத்துக் கொண்டவர்கள் என்போரும் அடங்குவர்.


தொகுப்புமேலும் சிறப்புப் படங்கள்...


Image:wbar_white.jpg
விக்கிமீடியாவின் பிற திட்டங்கள்
விக்கிபீடியா வணிக நோக்கமற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம், மேலும் பல பன்மொழி, கட்டற்ற திட்டங்களை செயல்படுத்துகிறது:
விக்சனரி
கட்டற்ற அகரமுதலி
விக்கி மேற்கோள்கள்
மேற்கோள்களின் தொகுப்பு
விக்கி இனங்கள்
உயிரினங்களின் கோவை
விக்கி செய்திகள்
கட்டற்ற உள்ளடக்கச் செய்திச் சேவை
விக்கி மூலம்
கட்டற்ற மூல ஆவணங்கள்
விக்கி பொது
பகிரப்பட்ட ஊடகக் கிடங்கு
விக்கி பல்கலைக்கழகம்
கட்டற்ற கல்வி கைநூல்களும் வழிகாட்டல்களும்
விக்கி நூல்கள்
கட்டற்ற நூல்கள் மற்றும் கையேடுகள்
மேல்-விக்கி
விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு

உங்கள் கருத்துக்கள் | பிற மொழி விக்கிபீடியாக்கள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்